எனது கிறுக்கல்கள்

 

 

 

பனித்துளியின் சுவாசத்தில் ஒரு இடம்.

மெல்லிய ஒளியும் அந்த ஒளியில் சிறு இருட்டும்,

அப்பப்பா!! எப்படியான ஒரு கூதல் வீசும் கற்று....................
சூரியன் கூட குளிரினால் போர்வை மூடி தூங்கும் நேரம் இது......

ஆனால், பூமியன்னை இதை எல்லாம் ரசித்துக் கொண்டே பச்சை போர்வையினால் மூடி இருக்கிறாள்.

ஏன்? பூமி அன்னைக்கும் வீசும் காற்றினால் குளிர்கிறதா?

கேட்டுத்தான் பாருங்களேன் !!!!



உங்களுடன்,

கயல், விக்னேஷ் சுடர்

 

காற்றுள்ளவரை உனை மறவேன்!
கதிர் உள்ள வரை உனை மறவேன்!
நீ தந்த முத்தங்கள் , நீ தந்த செல்லமான தண்டனைகள் எதையும் மறவேன்!
எனக்கான உனது கண்ணீர் துளி ...........
எனக்கான உனது வாழ்க்கை .......
எனக்கான உனது தியாகம்.................

எதையுமே மறவேன்!!!
ஏன் தெரியுமா??
நீ என் அம்மா !!!!!!!!!!!!!!!!!!

உங்களுடன்,
கயல்.விக்னேஷ் சுடர்


 

வட்டத்தின் விட்டத்தில் வாழ்வமைத்து
முட்டைக்குள் குஞ்சென்ற நிலையாகத்தே
படத்தை போல் பறந்து ஏறி நில்லு -வான்
முட்டிடும் உன் திறன் ஊரும் சொல்லும்.............

-உங்களுடன்
கோபிநாத்

 

கடந்ததைப் பற்றி நினைக்காதே என கூறுவார்கள்
"கடந்ததைப் பற்றி நினை" அது உன் வாழ்வில் நீ விதைத்த அனுபவமாகும்....
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வில் சறுக்கினால் அது அனுபவம் 
சறுக்காமல் செல்வது புத்திசாலித்தனம்

நாம் எல்லோருமே சருக்கிறோமே தவிர
கடந்து செல்வது இல்லையே!!!!!!!!!!!!!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கொலை கொலையில் தான் முடியும்
கொலை செய்தவனும் செய்யப்படுபவனும் கொலை செய்யப்படுகிறார்கள்.......................
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுடன்,
விக்னேஷ் சுடர்

 

காதலித்துப் பார்த்தேன் ... அல்ல....
காதலித்து பார்க்கிறேன்..
சூரியனை வெறுத்தேன் 
மழைத்துளியை ரசித்தேன் -ஏன் 
உன் மவுனங்களையும் கூட...
தபால்காரன் எனக்கு தெய்வம் ஆகவில்லை-முகப்புத்தகம் 
வாழ்க்கையானது ...
பெண்ணே நான் உன் சிரிப்பை கண்டு உன்னிடம் உன்னிடம் தோற்கவில்லை 
உன்மவுனத்தில் தோற்றேன்.. 
எனக்கு கவிதை பிடிக்கவில்லை -ஆனால் 
இப்போ......???????????????​.......

உங்களுடன்,
கவிதைக் கிறுக்கன்
விக்னேஷ் சுடர்

 

நீராய் உருகி என் ஆருயிராய் நின்றவளே 
என் அன்னை!!!!
உங்களுடன் 
இன்னும் என் அன்னையின் மடியில் குழந்தையாய் ,
விக்னேஷ் சுடர்